RSS

20/12/2014

நகரங்களில் க்றிஸ்மஸ் சந்தை,கொண்டாட்டம்

ஜேர்மனி,ஆஸ்திரியாவின் பிரபல நகரங்களில் க்றிஸ்மஸ் சந்தை, கொண்டாட்டங்களில் Top 10 புகைப்படத்தொகுப்பினை இணையதளம் வழங்கியிருந்தது.அதனை இங்கு பகிர்கின்றேன்.
                           1.Cologne, Germany(Köln)
                          KW kölner weihnachtsgesellschaft mbH
                         
                          2.Berlin (capital) Germany
KW Kölner Weihnachtsgesellschaft mbH
KW Kölner Weihnachtsgesellschaft mbH
Köln, Deutschland
                                      Berlin Michael setzpfandt
                            
                               3.Rostock,Germany.
                            Großmarkt Rostock MbH ulrich.
                      
                             4.Düsseldorf,Germany.
                                    Düsseldorf M&T GmbH.
                    
                                5.Dresden,Germany
                                Fl-user rengawfalo.
                      
                                  6.Leipzig,Germany
                                    Dirk Brzoska.
                  
                                7.Munich,Germany.(münchen.)
                                    Müchener pvt
                       
                                  8.Nürnberg,Germany.
                                      Uwe Niklas Bea
                             9.Stuttgart,Gernmany
                                     in.Stuttgart(Nieder Müller)

               10.Halbturn,Burgenland,Austria.(Österreich)
                                         Gerhard Ulram
                            
                                     11.Wien,Austria
                                    MAGMAG events&promotion GmbH 
quelle.trivago.danke schön.
                   ****************************************
கடந்த ஒரு கிழமையாக இங்கு காலநிலை தொடர் 
அடைமழையும்,கடும் குளிரும்.இடையில் ஸ்னோ கொட்டியது.
ஆனாலும் கரைந்துவிட்டது.இம்முறை white chirtsmas இல்லையென கூறுகிறார்கள்.பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
                  *****************************************
அனைத்து நண்பர்களுக்கும்! இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்.

MERRY CHIRTSMAS & HAPPY NEW YEAR!!

FROHE WEINACHTEN UND EIN GUTES NEUES JAHR!!!
  

12/12/2014

க்றிஸ்மஸ் சந்தை Chirstmas Market

க்றிஸ்மஸ் வருகிறது என்றால் ஜேர்மனியில் எங்க ஊர் தீபாவளி மாதிரி ஒரு மாதத்திற்கு முன்னரே களைகட்டத்தொடங்கிவிடும். September மாதக்கடைசியில் சுப்பர் மார்க்கெட்டில் க்றிஸ்மஸ்க்கான சொக்லேட்ஸ், அலங்காரப்பொருட்கள், கேக் செய்வதற்கான பொருட்கள், உபகரணங்கள் வந்துவிட்டன. இங்கு அதைவிட  க்றிஸ்மஸ்சந்தை மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. வாரயிறுதி நாளில் நகரம் ஒன்றில் க்றிஸ்மஸ் சந்தை நடைபெற்றது. அங்கு சென்றபோது எடுத்த படங்கள்..
இதுதான் எங்க மாநிலத்தில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் உயர்ந்த க்றிஸ்மஸ் மரம். 42 அடி. இங்கு ஆரம்பித்த அன்றே சென்றபடியால் நிறைய அலங்காரங்கள் முடிக்கப்படவில்லை.

ஆனால் அலங்காரங்கள் முடிவுற்று லைட்ஸ் போட்டபின்னால் இப்படி!!!
                                    Danke-Thomas Winkler.
சிறுவர்களுக்கும் க்றிஸ்மஸ் சந்தை  மிக பிடிக்கும். நிறைய  பொழுது போக்கின்ற விடயங்கள்  இருக்கும்.
   நட்ஸ் வகைகள். (rosted)Almond, Walnut, Hazelnut, Macadamia
          பலவித வண்ணமயமான வடிவங்களில் மெழுகுதிரிகள்.
          இது கூட (பீர்,வைன் வடிவிலான) மெழுகுதிரிதான்.
                                    உருவ பொம்மைகள்.
                        மரத்தாலான கைவேலைப்பாடுகள்.
                                    Coconut with Chocolate
குளிர்காலமெனில் விற்றமின் சி தேவை. அதற்கேற்ப நிறைய Orange இப்போ கிடைக்கிறது. அத்துடன் பேரீச்சை.
                                      *************
ஜேர்மனியில் க்றிஸ்மஸ் சந்தையில் இந்த சூடாக்கப்பட்ட வைன்(Mulled wine) மிக பிரபல்யம். டொச்சில் க்ளூவைன்(Glüh wein) எனச்சொல்வார்கள். இது இல்லாமல் க்றிஸ்மஸ் சந்தை இருக்காது. இதில் Alcohol சேர்ந்ததும், சேராததும் இருக்கு.
Glühwein is usually prepared from red wine, heated and spiced with cinnamon sticks, cloves, star aniseed, citrus, sugar and at times vanilla pods.இது பற்றி இங்கு                               
                                    உணவகங்கள்
                                  இது என்ன????
Pretzel(க்ளிக்).இது பேக் செய்யப்பட்ட உப்பு சுவைமிக்க ஒருவகை Bread
  இது யாருக்கோ மிக விருப்பமாம். பூனைக்கா,??தேவதைக்கா(இப்ப மீனில்லை!!!!)
 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
இச்சந்தையின் சிறப்பு என்னவென்றால், தாங்களே தயாரித்த
பொருட்களை விற்பதுதான். கைவேலைப்பொருட்கள், மெழுகுதிரி,  குளிர்கால பாதுகாப்பு பொருட்கள்(ஸ்வெட்டர், மப்ளர்)என ஒருவருடகால உழைப்பு இதில் இருக்கும். ஒரு சிலர் தவிர்க்கமுடியாமல் வாங்கியதை விற்பார்கள். ஆனால் அதில் சிறியதாக குறிப்பிட்டிருப்பார்கள்.

அதற்கான விடை:_ சொக்லேட்டில் செய்யப்பட்ட Spanner
              *****************************************
கார்த்திகை பிறை பார்ப்பது அபூர்வம். ஊரிலேயே பார்க்கமுடிவதில்லை. மழைக்காலம். பார்க்கமுடியாது என்பதை விட கஷ்டம். இங்கு சொல்லவேவேண்டாம். ஆனா இம்முறை எங்களுக்கு பார்க்க கிடைத்தது. வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் அழகாக, மெல்லிய கீறாகத்தான் தெரிந்தது. ஆனா கமராவில் எடுத்தபின் இப்படி!!!!!ஆ..க..
-------------------------------------------------------------------------      











06/12/2014

கிறிஸ்மஸும், பரிசுகளும்.

 டிசம்பர் 6
December 6  நிக்கோலவுஸ் நாள். நிக்கோலவுஸ் துருக்கியில் இருந்தவர். பணக்காரர். பெற்றோர் இறந்தபின் தன் சொத்துக்களை ஏழை எளியவர், பெண்கள், முக்கியமாக சிறுவர்களுக்கு கொடுத்தவர். அவர் டிசம்பர் 6ந் திகதி இறந்தார். அத்தினத்தையே ஜேர்மனியில்- நிக்கோலவுஸ் டாக் (Nikolaus tag), ஆஸ்திரியாவில்- நிக்கோலோ(Nikolo), இங்கிலாந்து, அயர்லாந்தில்- பாதர் க்றிஸ்மஸ்(Father Christmas),வட அமெரிக்கா-சண்டா க்ளவுஸ்(Santa claus) என கொண்டாடுகிறார்கள்.
கூடுதலான இடங்களில் வீட்டு வாசலில் சின்னப்பிள்ளைகள் ஷுக்களை(Shoes) துடைத்து,துப்பரவாக வைத்திருப்பார்கள். 5ம் திகதி இரவு  நிக்கோலவுஸ் வந்து பரிசுகளை வைப்பார் என்னும் நம்பிக்கையில்."நீங்க அன்பாக எல்லோரிடமும் இருக்கவேண்டும் அப்போதான் நிக்கோலவுஸ் வருவார்,பரிசுகள் தருவார் என", இது அவர்களுக்கு பெற்றோர் அன்பை வெளிப்படுத்துமுகமாக சிறுவயதிலிருந்து சொல்லிவருவதால் இச்செயலை செய்வார்கள்.


இங்கு கிறிஸ்மஸ் ஐ விட அதற்கு முதல்நாளான 24ந் திகதியே பெரிய கொண்டாட்டமாக இருக்கும். கிறிஸ்மஸ் மரம்(Chirstmas Tree) வீட்டில் வைத்து, அதற்கு அலங்காரங்கள் செய்து, பரிசுபொதிகள் அதனடியில் வைக்கப்பட்டிருக்கும். அனைவருக்கும் பரிசுகள் வழங்கும் தினமாக 24ந்திகதி இருக்கும்.
 ஆவலுடன் எல்லாரும் எதிர்பார்த்திருக்கும் நாள். மாலையில் பரிசுகள் வழங்கி, இரவு விருந்து என களை கட்டும். அந்நாள் இங்கு Heiliger Abend (ஹைலிகர் ஆபெண்ட்) Christmas Eve எனப்படும்.
படங்கள்--நன்றி கூகுள்.
 *******************************************************
இன்று எங்கள் மகனுக்கு நிகோலவுஸ் பரிசாக, வரும் புது வருடம் ஜனவரியில் பாடசாலையிலிருந்து  Snowboarding க்குகாக ஆஸ்திரியா செல்லவிருக்கிறார். அதற்காக Ski dress set  எடுத்து கொடுத்திருந்தோம்.
*******************************************************
                    இது என் கமராவிலிருந்து.......
                                   

01/11/2014

அசத்தலாமே சமையலில்- 2

இம்முறை ருசித்து ரசித்ததில் உமையாள்காயத்ரி, மேனகாவின் குறிப்புகள்.
                                   உமையாள் காயத்ரி
              குழிப்பணியாரம் - காரம்இனிப்பு
                                            சோயாகுழம்பு
                                            பீட்ரூட் சூப்
இந்த சூப் மிக நல்ல ருசி. கராம்பு,பட்டையின் வாசமும்,பாசிப்பருப்பு இடையில் கடிபடும்போது நன்றாக இருக்கு. பார்த்த அன்றே பீட்ரூட் இருந்தது உடனேயே செய்துவிட்டிருந்தேன்.காய்ச்சலின் (பீவர்.குளிர் ஆரம்பித்திருக்கும் நிலையில் வைரஸ்பீவர் தாக்கம். அதற்கு நாங்களும் தப்பவில்லை.) போது நான் காரட் சூப் சாப்பிட்டேன். சூப்பரா இருந்தது அந்நேரம். மன்னிக்க உமையாள் போட்டோ எடுக்கல. மீண்டும் செய்து எடுத்துப்போடுகிறேன்.
          மேனகாசத்யாவின் குறிப்புகள்:--
                           அம்மினிகொழுக்கட்டை
                            குடமிளகாய் சீஸ்பராத்தா.  paratha
                                         சாம்பார்
நான்  மேனகா கொடுத்த சாம்பார் பொடி குறிப்பினை எடுத்து சாம்பார் செய்திருக்கேன்.
அம்மினிகொழுக்கட்டை என் கணவருக்கு பிடித்தமானது.
அடிக்கடி  கேட்பார்.  'செய்யத்தெரியுமா', என. மாமியார் ஊருக்கு செல்லும்போது செய்து தருவார்.  மேனகா குறிப்பில் பார்த்ததும் சதுர்த்தியன்று செய்திருந்தேன்.நன்றாக வந்தது. நல்ல டேஸ்ட் கூடவே. இப்போ 2,3 தரம் செய்தாயிற்று.
உமையாளின் குறிப்புகளும் செய்வதற்கு சுலபமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கு.
நல்ல குறிப்புகள் தந்த உமையாள் & மேனகாவுக்கு நன்றிகள்.
நேரமிருப்பின் செய்துபாருங்க தோழிகளே!!!
******************************************************
இங்குள்ள supermarket ல் விற்கும் மாம்பழத்தை பெரும்பாலும் நான் வாங்குவதில்லை. 1.விலை அதிகம். 2. எங்க ஊர் பழம் சாப்பிட்ட ருசிக்கு இவை ஏதோ எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் கடந்த மாதம் ஒரு super market ல் வந்த மாம்பழம் விலை 0.99cent என மலிவாக  விற்றார்கள். பார்க்க வாங்க வேணும் போல இருந்தது. சரி வாங்கித்தான் பார்ப்போம் என வாங்கினேன். சாப்பிட்டால் ரெம்ப நல்ல taste. ஆனால் விலைகுறைப்பு எல்லாம் ஒரு வாரம்தான். இப்போ விலை கூடிவிட்டது.
 பிட்டு, பொரித்தகுழம்பு, மாம்பழம்!!!
சாதாரணமா பிட்டும்,மாம்பழமுமே சாப்பிடலாம்.அன்று திடீர் வரவு மாம்பழம்.
*******************************************************
வாங்கி வந்திருந்த தக்காளி ஒன்று இப்படியாக!!!!!!
****************************************************





22/10/2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
 படம்- கூகுள்.
*******************************************************
 

 
Copyright பிரியசகி