RSS

26/08/2014

பிரமிட் தேசத்தில்...

இந்தவருட கோடைவிடுமுறைக்கு நாங்கள் எகிப்தில் Hurghada எனும் இடத்திற்கு சென்றுவந்தோம். இது செங்கடல் பகுதியாகும்.  பாடப்புத்தகத்தில் எகிப்தைப்பற்றி படித்ததுதான். அங்கு போவது என்பது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது. என்னவருக்கு புது இடங்கள் பார்க்கபோவது என்பது மிகப்பிடிக்கும். இம்முறை இவ்விடத்தினை தெரிவு செய்து புறப்பட்டோம்.
 வீட்டிலிருந்து புறப்பட்டு....
                           இதில் Ausfahrt என்பது Exit
 விமான நிலையத்தில்...
நாங்க சென்ற விமானம்..
 விமானம் ஏறியபோது. அழகு!!!!(ஜேர்மனி)
    விமானம் இறங்கியபோது.. Hurghada
                   ஹோட்டல்..
எனக்கு விமானத்தைவிட்டு இறங்கியதும், என்னடா இது சூரிய
மண்டலத்திற்கா வந்தோம் என நினைக்குமளவு வெய்யில், சூடு. நாங்க வெளிக்கிடும்போது ஜேர்மனியில் மழை. அதற்கு நேர்மாறா hurghada இருந்தது. தங்கிய ஹோட்டல் மிகப்பெரியதாக இருந்தது.  உள்ளே மிக நன்றாக
பராமரிக்கிறார்கள். 3 நீச்சல் குளம் இருக்கின்றது. ஓரே ஆறுதல் பக்கத்திலே செங்கடல். பகலில் வெளியில் செல்லமுடியாதளவு வெய்யில். மாலை வேளைதான் சுற்றிவரமுடிந்தது. வானத்தில் ஒரு சின்ன புள்ளியா கூட முகில் இல்லை. அப்போதான் எனக்கு ஸ்னோ கொட்டினால் என்ன என்று இருந்திச்சி.
ம்.ம்ம் அக்கரைக்கு இக்கரை..... 

செங்கடல் (Redsea). தண்ணீரில் உப்பு மிகமிக அதிகம். அவ்வூர் வெயில் மாதிரி.
            ஹோட்டல் உள்ளே...
இப்படித்தான் எங்கு காணினும் பேரீச்சைமரங்கள். கடைகளில் காணக் கிடைக்கவில்லை. ஆனால் ஹோட்டல்வளாகத்தில் நிறைய காயிலிருந்து பழம் வரை. இங்கு ரமலான் நேரம் மஞ்சள் நிறகாய்கள் வரும். 
 நான் ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோ எடுத்திருக்கேன்.பாருங்க.
இங்கு அரளிப்பூ,நொச்சிப்பூ,போகன்வில்லா அதிகமாக கண்டேன்.அதைவிட விபூதிப்பச்சை மரம் வீதியில் கண்டபடி வளர்ந்திருக்கு. இதைமட்டும் போட்டோ எடுக்காம மிஸ் பண்ணிட்டேன்.!!!!!!
இவைகள் அங்கு உள்ள கடைகள்..
அங்கு நாங்க முக்கியமான  எகிப்தின் பண்டைய வரலாற்று புகழ் மிக்க கர்னாக் கோவில் (KarnakTemple),  Mortuary Temple of Hatshepsut  சென்று பார்த்தோம். கர்னாக் கோவில் லுக்ஸோர் (Luxor) எனுமிடத்தில் இருக்கிறது. அங்கு இன்னும் வெயில்.ஆனாலும் அந்த வெயில் கூட ஒரு அழகு. ஏனென்றால் 2நாளில பழகிவிட்டது. போகும் பாதையெல்லாம் ஓரே பாறை. பச்சை பசேல்களை காணமுடியவில்லை. அருகில் சின்னதா கூட ஊர்களில்லை. இப்பவும் அப்பாதையை நினைத்தால்..???ஆக்ஸிடெண்ட் ஆகி ஒரு வாகனம் கூட நின்றிருந்தது. அவ்வழியால் சென்ற வாகனங்கள் நிற்ககூட இல்லை. எங்க பஸ் உட்பட. பொலிஸார் வர 3,4 மணிநேரமாகும் என்றார் சுற்றுலா வழிகாட்டி.(guide).
 அப்பாடா ஒருவழியா ஊரையும், பச்சைபசேல்களையும் காணமுடிந்தது.
நைல்நதி. இதில் 2மணித்தியாலம் பிரயாணம் செய்தோம். உலகின் நீளமான நதியில் பயணம்.நைல் நதி ஓடும் பக்கம் பசுமைதான்.அதனையும் தாண்டி பார்த்தால் பாறைகள். இங்கு மாம்பழம்,வெண்டிக்காய்,பீன்ஸ் அதிகமாக கண்டவை. வாழைப்பழம் எனக்கு என்னவோ நம்மூர் இதரை வாழைப்பழத்தின் ருசியை ஞாபகப்படுத்தியது.
இதுதான் வரலாற்று புகழ்மிக்க கர்னாக் கோவில்.
இந்த இடத்தில் இன்னும் தாங்கமுடியாத வெயில். தண்ணீர், தண்ணீர்தான். பஸ்ஸில் தாராளமாக தண்ணீர் பாட்டில் கொடுத்திருந்தார்கள். ஆளாளுக்கு 3,4 என்று எடுத்து வந்ததுதான். 
இதில் எகிப்திய பண்டைய எழுத்துக்கள் இருக்கின்றன. hieroglyphic என்று அதனை கூறுவார்கள். 


ஒவ்வொரு எழுத்துருவங்களும் ஒவ்வொரு பொருளையும் குறிகின்றன, இவை பிக்டோகிராம் (pictogram) என அழைக்கப்படும். பல பிக்டோகிராம்கள் சேர்ந்து ஒவ்வொரு ஒலிகளை ஏற்படுத்துகின்றன, ஒவ்வொரு ஒலிகளின் கூட்டங்களும் போனோகிராம் (phonograms)என அழைக்கப்படுகின்றன. இப் போனோகிராம்களே ஒவ்வொரு புதிய பலபல சொற்களையும் உருவாக்க மூலாதாரமாய் அமைகின்றன. 
சுற்றுலா வழிகாட்டி என் பெயரை ஒரு காகிதத்தில் எழுதிவிட்டு,என்னிடம் தரமுன்னமே காற்றில் பறக்கவிட்டிட்டார். உண்மையில் நல்ல வழிகாட்டி.ஜேர்மன் நன்றாக பேசினார். ஒரு பட்டதாரியும் கூட. இம்முறை நான் சிறுநோட்டில் குறிப்புகளாக எடுத்தும்,புரியாததை என்னவரிடம் கேட்டும் எழுதிவைத்ததனால் இங்கு எழுதுவதற்கு பயன்படுகிறது.
 இங்குள்ள சதுரத் தூபி(obelisk) ராணி (Queen )Hatshepsut கட்டியதாகும்.    இது பண்டைய உலகின் மிக உயரமான(97 அடிகள்) ஒற்றைக் கல்லிலான சதுரத் தூபி.
                மேலும் சில படங்கள்.




போகும் வழியில் இவற்றையும் பார்த்தோம். இது அங்கு பாறைக்கல்லிலிருந்து உருவாக்கி விற்கிறார்கள்.
அடுத்து நான் பார்த்த அழகான கோவில்.இதற்கு என்னவரும்,மகனும் வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். இங்கு அதிக வெயில்.இதுவும் ஒருவரலாறு மிக்க இடம். Deir el-Bahri Temple Complex வளாகமாகும். இந்தக்கோயில் ராணி (Queen) Hatshepsut கட்டியதாகும்.  இந்தகோயில், நைல் நதியின் மேற்கு பகுதியில் உள்ள  ஒரு அரைவட்ட மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு பஸ் நின்ற இடத்திலிருந்து கொஞ்ச தூரம் போகனும். இப்படி ஒரு வண்டியில்தான் இப்பதையில் பயணித்தேன். காற்று அனலாக......
அங்கு இறங்கியவுடன் படிகளில்!!!!! ஏறி போகனும். வெயிலில் அத்தனை படிகளில் ஏறி, திரும்பி வரும்போது என் அழகான தொப்பியை காற்றில் பறக்கவிட்டு மறக்கமுடியாத வரலாற்று அனுபவமாயிற்று.
 காலையில் 4.30 க்கு ஆரம்பித்த பயணம் எல்லாம் பார்வையிட்டு ஹோட்டலை  வந்தடைய இரவு 9-9.30 ஆயிற்று.
இது Hurghada city ல் பார்த்த அழகான பள்ளிவாசல்.அருகில் கடற்கரை.
இங்கு நான் பார்த்து மனது கஷ்டப்பட்ட விடயம். ஒட்டக சவாரி. எங்களுக்கு துளியும் விருப்பமில்லை. மகன் பார்த்ததும் சொல்லிவிட்டார். இதில் சவாரி செய்ய வேண்டாம் என்று. அந்த ஒட்டகத்தை வைத்து பிழைப்பு நடத்தும் இளைஞருக்கு பணம் கொடுத்தோம். அவர் அவ்வளவுத்தூரம் எங்களை கெஞ்சினார். குறிப்பா பணம் கொடுத்தபின்னரே படம் எடுக்க விட்டார்!!!!

சுற்றுலா இடமென்பதால் நிறைய பயணிகள்.அதிலும் குறிப்பா ஜேர்மனி,ரஷ்யா நாட்டவர்கள் அதிகம். இங்கு வந்ததும் நான் முதலில் திகைத்துவிட்டேன்.ஏனெனில் ஜேர்மன் சுப்பர்மார்க்கெட் பெயர்களில் கடைகள். அல்டி(Aldi), லிடில்(Lidl), Kaufland என்று. அனேக ஆட்களுக்கு டொச்,ஆங்கிலம்,ருஷ்ய பாஷைகள் தெரியும். இரவு நேர shopping தான் அதிகம். நான் பெண்களை காணவேயில்லை.!!!!! அப்படியும் கண்டு எடுத்தவர்கள் இவர்களே. நேரிலே போட்டோ எடுக்க விடமாட்டார்கள். பணம் கொடுத்தால்தான் எடுக்கவிடுவார்கள். அல்லது அவர்கள் விற்கும் பொருளை வாங்க வேண்டுமாம். இது கடையினுள் இருந்து ஒளித்து எடுத்தது.


இதில் எனக்கு சிறிதான மனக்குறை. பிரமிட்டை பார்க்கவில்லையே என.அங்கு இப்போ போவதற்கு தடை.அதனால் போகமுடியவில்லை. ஆனால் ஆரம்பகாலத்தில் மம்மிக்கள் வைத்திருந்த இடத்தை பார்வையிட்டோம். அங்கு படங்கள் எடுக்க தடை.
இங்குள்ள டாக்ஸி இதுதான்..
 மாலை வேளையில்....
ஒருவாறு விடுமுறை இவ்வருடம் இனிதாக கழிந்தது. இவை வரும்போது விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள். இது Hurghada.
இவை ஜேர்மனி வந்ததும்....கொள்ளை அழகு மேலிருந்து பார்க்கும்போது. நாங்க திரும்பி வந்தபோது நல்ல காலநிலை.
                         *************************
படங்கள் அதிகம். நான் கொலாஜில் போட்ட படங்கள் அதில் தெளிவாக இருக்கோ தெரியவில்லை. பொறுத்தருள்க. மிகப்பொறுமையாக வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.
                                         _()_ _()_ _()_ 













 

20/08/2014

அசத்தலாமே சமையலில்..

இப்பதிவில் இணையத்தள  நண்பிகளின் சமையல் குறிப்புகளை பகிர்கின்றேன். இவர்கள் கொடுத்திருந்த சமையல் குறிப்புகளை நான் செய்திருக்கிறேன். இன்னமும் செய்கிறேன்.  குடும்பத்தினருக்கும், விருந்தினர்களுக்கும் நண்பிகளின் குறிப்புகளிலிருந்து செய்து கொடுத்து, பாராட்டை பெற்றிருக்கிறேன் என்றால் இவர்கள் குறிப்புகள்தான் காரணம். இதை பகிர்வதன் மூலம் நல்ல குறிப்புகளை தந்த அவர்களுக்கு என் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
                                 *******************
         ஆஹா என்ன ருசி அஞ்சுவின் ரெசிப்பி 
  கோதுமைத்தோசை All time favorit food. இப்போ உளுந்து
  தோசைக்கு பதில் இதுதான்.
                                         தக்காளி தோசை
 குணுக்கு ஏற்கனவே பகிர்ந்திருக்கேன். இது டேஸ்டியான ஸ்நாக்ஸ்.
                       அஸ்பாரகஸ் /கேரட் பொரியல்
இது இம்முறை வாங்கிசெய்திருந்தேன். நன்றாக இருந்தது.
சீசன் காலத்தில் மட்டுமே செய்யலாம்.
மகியின் குறிப்பான வெங்காய வடகத்தை அஞ்சு செய்திருந்தாங்க. அவங்க செய்ததை பார்த்து, ஓர் ஆர்வ(ம்)த்தில் செய்தது.அத்துடன் அப்போ இங்கு நல்ல வெயிலும் கூட.  நான் செய்த வடகம் இவை.
                                  பொரித்தபின்
                             ***************
ஆசியாவின் சமையலையும்  அசத்தலாமே அருமையா 
 ஆசியாவின் குறிப்புகளில் இருந்து நான் செய்தவை.
                                         சோயா வடை 
ஆசியா சிறப்பு விருந்தினர் என்கிற பகுதியையும் செயல்
படுத்துறாங்க.அதில் மேனகா சத்யா கொடுத்திருந்த
செட்டிநாடு வெஜ் புலாவ்  செய்திருந்தேன்.  ருசி அபாரம்.
இன்னொரு சிறப்பு விருந்தினரா அறிமுகப்படுத்தியிருந்த 
சங்கீதா செந்திலின் குறிப்பான சாத பக்கோடா செய்திருந்தேன் .
அருமையான ,ஈசியா செய்யக்கூடிய ஸ்நாக்ஸ். வார இறுதி 
நாட்களில் செய்வேன்.
                                         சாத பகோடா
                            சாதம் மீந்திருந்தால் சுலபமா செய்யலாம். 
 இது ஆசியாவின் சமீபத்திய குறிப்பு 3இன் 1 
       Strawberry milkshake/ lassi / Strawberry,
       Banana Smoothie
இது  சீசன் டைமில் குறிப்பை வெளியிட்டிருந்தாங்க. நானும் உடனேயே செய்திருந்தேன்.  3ன் 1 சூப்பர்.(link)
                          
                          பீட்ரூட் ஓணம் பச்சடி//காலிப்ளவர்65
 பீட்ரூட்(link)
காலிப்ளவர்65 (link)
*************************************************************
                           கிர்ணி பழ மில்க்‌ஷேக்
  மகியின் குறிப்புகளும் மறக்காமல் செய்தேன்
ஈஸி கொண்டைக்கடலை கத்தரிகுழம்பு.
வாழைக்காய் கறிப்பொடி.
இதை நான் முதலில் ஆர்வத்தில் உருளைக்கிழங்கில் செய்தேன்.
இப்போ  வாழைக்காயிலும் செய்துவிட்டேன்.
டேஸ்ட் நன்றாக இருக்கு.
இப்பொடியை  செய்து வைத்திருக்கேன். ஏதாவது செய்தால் அவசரத்திற்கு உதவுகிறது. மிக்ஸ்ட் வெஜிடெபில்ஸுக்கும் போட்டேன்.நன்றாக இருந்தது.
                          உருளை-குடைமிளகாய் மசாலா
                                  ஆனியன் பப்ஸ்
                           ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
 உமையாள்காயத்ரியின் குறிப்பு வெண்டிக்காய் ப்ரை.
வித்தியாசமான டேஸ்ட். குழம்பு,சாம்பார்,பச்சடி என்றுதான் செய்திருக்கிறேன். இப்படி செய்ய நன்றாக இருக்கு.
                                  வெண்டிக்காய் ப்ரை
                *******************************************
என் சிறுவயதிலிருந்து, இன்றுவரைக்கும் நட்புடனிருக்கும் 
அன்பு நண்பியின் பிறந்தினத்திற்காக செய்த கார்ட்.
                      *******************************************************
 நன்றிகள், நன்றிகள் ஓராயிரம் நன்றிகள்.....
இத்தளம் இப்போ ஆரம்பித்த மாதிரி இருந்தது. அதற்குள் இரண்டு வருடம் பூர்த்தியாகி 3ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறேன்.இன்றளவும் ஓரளவு பதிவுகளை (34) எழுதி, 65 பேர் என் பக்கத்தை தொடருகிறார்கள் என்றால் அதற்கு, ""நீங்களும் பதிவு எழுதுங்கோ,"" என்று சொன்னதோடு நின்றுவிடாமல், இத்தளத்தை உருவாக்கித்தந்து,  ஊக்கப்படுத்திய எங்கள்  பூஸார், ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அவருடன் ஊக்கம் கொடுத்து,"பிரியசகி" என பெயரை தேர்வு செய்த அஞ்சு, ஊக்கம் தந்த இமா,இளமதி ஆகியோருக்கும் என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன் என் தளத்துக்கு வருகை தந்து, தங்கள் கருத்துக்களை தெரிவித்து என் பக்கத்தை தொடரும் அனைத்து அன்பான உள்ளங்களுக்கும் இத்தருணத்தில் இதயம் நிறைந்த நன்றிகள். என் பதிவுகளில் ஏதேனும் குறைகள்,பிழைகள் இருப்பின் அதனை தெரியப்படுத்தவும்.திருத்திக்கொள்ள ஏதுவாக அமையும். 
உங்கள் அன்பான ஆதரவுக்கும்,ஊக்கத்திற்கும் மீண்டும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
                                         _()_  _()_  _()_



 
Copyright பிரியசகி