RSS

30/01/2015

எங்கெங்கு காணினும்.....

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனி பொழிய ஆரம்பித்துவிடும். இம்முறை கடந்தவருடம் பனி கொட்டவேண்டிய நேரம் இங்கு நல்ல வெயில். மிக தாமதமாக இப்போ ஜனவரி மாத இறுதியில் பொழிய ஆரம்பித்திருக்கின்றது. நேற்றும், இன்றும் கூடுதலாக இருக்கின்றது. இது தொடரும் என தெரிகிறது.
எங்கெங்கு காணினும் ஒரே வெண்மையாகவே இருக்கு. அழகாகதான் காட்சியளிக்கின்றன. அந்த அழகை  நீங்களும் பார்த்து ரசிக்க......










இது ஸ்னோ அள்ளிக்கொட்டுவதற்கு பயன்படுவது. மற்றது வாளியினுள் ஸ்பெஷல் உப்பு.(Salz - salt) வாசலில் கொட்டியிருக்கும் ஸ்னோவை(1வது படம்) அள்ளிக்கொட்டின பின் நிலத்தில் ஆங்காங்கு சிலவேளைகளில் வழுக்கும் தன்மையாக இருக்கும். அத் தருணத்தில் இந்த உப்பை தூவிவிட்டால் கரைந்துவிடும். வீட்டுக்கு (தபாற்காரர், பேப்பர் கொண்டு) வருபவர் வழுக்கி விழுந்துவிட்டால் நாம்தான் அவர்களுக்கான பணம் (மருத்துவச்செலவுக்கான)கட்டவேணும்.
இவர் அள்ளிகொட்டுகிறார்.
ஸ்ஸ்..ஸ்ஸ்ப்பா நானும் அள்ளனுமே!! 'ஸ்னோவை'தான்.
******************

15/01/2015

பொங்கல் வாழ்த்துக்கள்!!!

இணைய நட்புக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

                          ஊரில் எங்கள் வீட்டில் பொங்கல்...




 ***********************************************







 
Copyright பிரியசகி