RSS

24/12/2013

நத்தார்,புதுவருட வாழ்த்துக்கள்

இனிய  நத்தார்  நல்வாழ்த்துக்கள் 
                          இணைய நட்புகள் அனைவருக்கும் 
                          இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்.


*****************************************************
                                இனிய புதுவருட வாழ்த்துக்கள் 
****************************************************

04/12/2013

வாழ்த்துக்கள்

 இன்று காகிதப்பூக்கள் இணையதள ஓனர் ,
 க்விலிங் டீச்சர்  அஞ்சுவுக்கு  Angelin இன்று பிறந்தநாள்.
                இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஞ்சு . 
நோய்நொடியின்றி ,சீரும் சிறப்புமாய், மிக்க மகிழ்வுடன் 
வாழ  வாழ்த்துகின்றோம் .


இது நான் tea bag folding என்ற முறையில் செய்த பிறந்தநாள் வாழ்த்து அட்டை.
.                               *******************************************************

வாழ்த்துக்கள்:-
நிறைய சமையல் குறிப்புகள் உட்பட, பல்சுவை பதிவுகள் தரும் எங்கள் அன்புத்தோழி மகி (mahi s space)அவர்களுக்கு ,அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச, மகிழ்ச்சிகளை வாரி வழங்க வந்திருக்கும் குட்டி தேவதைக்கு  வாழ்த்துக்கள்.
  இவ்வாழ்த்து அட்டை iris folding முறையில் செய்திருக்கேன்
********************************************************************

 படித்ததில் பிடித்தது
நான் படித்ததில் எனக்கு இன்னும் நம்பமுடியாமல் இப்படியும்    
நடந்திருக்கிறதா என ஆச்சரியமளித்த ஒரு பதிவின் இணைப்பை
பகிர்கின்றேன். நீங்களும் ஒரு தடவை படித்துப்பாருங்க.
சகோதரர் திரு. என் .கணேசன் அவர்களது வலைப்பூவில் 
எழுதிய  அதிசயம் ஆனால் உண்மை என்ற பதிவே அது.

************************************************************
                  
 
  
 பிடித்த பாடல்:-
                                             
                             _()_ ()_ ()_ ()_ ()_ ()_ ()_()_ 





01/11/2013

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
*****************************************


                              ​_()_ _()_ _()_ _()_ _()_

16/10/2013

குளிர்காலத்து நண்பன்

 வாழ்த்துக்கள்:
 இன்றகலைக்கவியரி இளமதியின் பிறந்த நாள்.
 இளமதி இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி,
 நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக வாழ  வாழ்த்துகிறேன்.

                         
                                 Birthday from 123gifs.eu

 *******************************************************
இங்கு குளிர்காலம் தொடங்கி, இருட்டு சீக்கிரமாக வரத் தொடங்கிவிட்டது. மரங்களில் இலைகள் மஞ்சள் நிறமாகி உதிரத்தொடங்கிவிட்டன.
 பெட்டியில் வைத்திருந்த (புதிதாக வேறு வாங்கினது உட்பட) விண்டர் உடுப்புகள்(dresses) வெளியில் எடுத்தாகிவிட்டது. இது வழமையாக நடக்கும் நிகழ்வுதான். வெயிலைச் சமாளித்தாலும்,குளிரை சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம். ஸ்னோ பார்க்க அழகாயிருக்கும். ஆனால் ஆபத்துக்கள் இருக்கின்றன. குளிர்காலமாதலால் இங்கு இனி ஹீட்டர் போடவேண்டும்.
 ஹீட்டர்கள்  இங்கு காஸ்,எண்ணெய்மூலம் இயங்குபவை.
எங்கள் வீட்டில்இயங்கும் ஹீட்டர் காஸினால் இயங்குகின்றது.
வருடத்தில் இரு தடவை டாங்கில் காஸ் நிரப்பிவிடுவார்கள்.
                                             Gas Tank
ஆனால் காஸ்,எண்ணெயால் இயங்கும் ஹீட்டர்கள் அதிக செலவானது என நாங்கள் வீடுகட்டும் போது அறிந்தமையால், முன்னேற்பாடாக சிமினியைக் (Chimney) கட்டிவிட்டோம். அனேகமாக புதிதாக கட்டப்படும் வீடுகளில் இவை இப்போ கட்டுகிறார்கள். இதனால ஏற்படும் செலவு குறைவாக இருக்கிறது. அதற்கு வேண்டியவை விறகு மட்டுமே.குளிர் ஆரம்பித்தவுடன் இதை எரித்தால் வீட்டின் எல்லா இடமும் நல்ல ஹீட்டாக இருக்கும். காலையில் ஜன்னலையோ அல்லது கதவையோ 5நிமிடங்கள் நன்றாக திறந்து வைத்திருந்து பின் மூடினால் நல்லது . வருடத்தில் 2 தடவை வந்து க்ளீனிங்(cleaning) கொன்ரோல்(control) செய்வார்கள். எனக்கு விண்டரில்கூட தோசை,இட்லி மா பொங்கிவரும்.
    ******************************************
                     இதுதான் எங்கள் Garden Haus
இதில் வெயில்காலங்களில் விறகுகளை வாங்கி அடுக்கி விடுவோம். வெளியில் மூடியிருப்பது வெட்டப்படாத சின்ன மரங்கள்.
         
சிமினியினுள் வைக்கும் அளவுகளில் வெட்டிய விறகுகளை வாங்கி   அடுக்கியிருக்கிறோம்.
ஆரம்பத்தில் விறகை எரிக்க பயன்படுத்தும் கற்பூரம்
                                         மரத்தூள்
கவுன்சிலில் அனுமதி பெற்றால் நாங்களே காடுகளில்
வெட்டுவதற்காக கவுன்சிலால் முத்திரை குத்தப்பட்ட மரங்களை
வெட்டி எடுத்து வரலாம்.கீழ் படத்தில் விற்பனைக்கும்,சொந்த
தேவைக்குமாக பக்கத்துக்காணியில் காடுகளில் வெட்டி எடுத்து வரப்பட்ட மரங்களை  அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
                                 Chimney or Fireplace
இப்படித்தான் எரியும். தேவையான விறகுகளை  எடுத்து வந்துஅருகில் வைத்து இருக்கிறோம். வலது பக்கம் இருப்பது அதனை சுத்தப்படுத்தும் ஆயுதங்கள். இதனை ஜேர்மன் மொழியில் கமின் என்பர்.(der kamin)
                       ******************************************* 
எங்கட வீட்டுக்கு கடந்த ஞாயிறு அன்று வந்த விருந்தாளி.
முள்ளெலி(க்குட்டி)
"லேட்டஸ்ட் தகவல் இவர் முள்ளெலி(hedgehog ) என்று எங்கள் டீச்சரும்,நண்பியுமான "இமா" கூறியிருக்கிறார். எனக்கு இப்பிராணியைத் தெரியாது. நான் முள்ளம்பன்றி என நினைத்து எழுதியிருந்தேன்.
                                   *****************************************
எனக்குப் பிடித்த பாடல்:_
இப்பாடலையும் கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.


                                     <><><><><><><><><><><><><><><><><>



 






13/10/2013

ஆயுதபூஜை,விஜயதசமி நல்வாழ்த்துக்கள்


அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
          ----------------------------------------------------------------------               
             இன்று வீட்டில் சரஸ்வதி பூஜைக்காக செய்த பிரசாதங்கள் 
                             
 ************************************************************
வழமையான பொங்கலுடன் அதிரா செய்த குஸ்குஸ்  பொங்கலையும் சேர்த்து செய்து விட்டேன் .
நல்ல  டேஸ்டாக இருந்தது. கொஞ்சம் குழைந்து விட்டது. நன்றி அதிரா.
               *********************************************

எனக்கு இப்பாடலை கேட்கும்போது பாடசாலை நாட்களில் பக்திப் படங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். சரஸ்வதி சபதம் படம் பார்க்கபோகும் போது எனக்கு நல்ல தடிமன்,காய்ச்சல்.ஒருமாதிரி அழுது பார்க்க போய் விட்டேன் . எனக்கு தடிமனால் கண்ணீர் வர.சிரிக்கவேண்டிய காட்சிக்கும் அழுதபடி பார்த்த ஓரே ஆள் என்று பஸ்ஸில் கிண்டலடித்தார்கள்.  இப்பாடலைக்கேட்கும்போது பாடசாலை ஞாபகம் வரும்.
              ****************************************************

 
                                         

 

05/09/2013

குலுக்கிய கைகள்

தலைவர் தேர்தல்: Chancellor Election.
*******************************
ஜேர்மனியில் வரும் 22ந்திகதி(22.9.13) அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போகும் தலைவர் யார்? என்பதற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. இத்தலைவர் பதவிக்கு
ஜேர்மனியின் தற்போதைய  Chancellor ம்,கிறிஸ்தவ ஜனநாயக்கட்சியின் தலைவியுமான (Christian Democratic Union. CDU)  அங்கேலா மார்க்கல்Angela Merkel (Angie ) அம்மையாரும்,
எதிர்கட்சியான சமூக ஜனநாயக்கட்சியின் (Sozialdemokratische Partei Deutschlands SPD) வேட்பாளராக Peer Steinbrück  பீர் ஸ்டைன்புறுக்  ம்  போட்டியிடுகிறார்கள். 
 _____________________________________________________
அதற்கான பிரச்சாரவேலைகள் ஆரம்பித்துவிட்டன.
நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று, தங்கள்  கட்சியையும், தலைவர் பதவிக்காக, தங்கள் கட்சியின் வேட்பாளரையும்  வெற்றி பெறச் செய்வதற்கான பிரச்சாரங்கள்   நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
  
 அங்கேலா மார்கலின் (CDU) கட்சியே நாங்க இருக்கும் இடத்தில் ஆட்சியில் இருக்கிறது. அந்த கட்சி ஆதரவாளர் இங்கு அதிகம். தனது பிரச்சாரத்தினை  நடாத்த கடந்த வெள்ளியன்று எங்கள் இடத்துக்கு அங்கேலா மார்க்கல் வந்திருந்தார். நீண்டகாலத்தின் பின் எங்கட ஊருக்கு வரும் தலைவர். நாங்களும் அப்பிரச்சாரக் கூட்டத்துக்கு   போயிருந்தோம் .  
மெரிக்க அதிபர் ஒபாமா , பிரான்ஸ் நாட்டு தலைவர் François Hollande பிரித்தானியாவின் தலைவர் டேவிட் கமரூன் இப்படி பல நாட்டு தலைவர்களது கைகளை, குலுக்கிய  கைகள் என் கையையும் குலுக்கியது  . 

 நான் அங்கேலா மார்க்கலைப்பார்க்கும் ஆவலில்தான்  சென்றேன்.  கை குலுக்குவேன் எனஎதிர்பார்க்கவேயில்லை. அவர் மேடைக்குச் செல்லாது மக்கள் நின்ற பக்கமாக வந்து, எல்லாருக்கு கைகொடுத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். என்  கையையும் பிடித்துக் குலுக்கினார்.
  அங்கு நின்றவர்கள் படம் எடுக்க கேட்டதற்கு,நேரம் போதாது, மன்னிக்கவும் என்று சொல்ல.பாதுகாப்பு அதிகாரிகள் அவரை  விரைவாக மேடைக்கு அழைத்து சென்று விட்டனர்.

 கணவர், மகன் பின்புறமாக நின்றனர்.அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனக்கு அவரை அறிந்த காலத்திலிருந்தே பிடிக்கும். அவர் இது 3ம் முறை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.2முறையும் நான் அவருக்கே வாக்களித்திருந்தேன். இம்முறையும் அவருக்கே என் வாக்கு. ஐரோப்பாவின்   "STRONG WOMAN " என வர்ணிக்கப்படுபவர் .
                              எங்க இடத்தில் நடந்த பிரச்சாரக்கூட்டம்
                           ****************************
2 கிழமைக்கு முன்னர்தான் விடுமுறைக்கு போலந்துநாட்டுக்கு Poland போய்விட்டு வரும் வழியில் பேர்லின்(BERLIN) சென்று, நான்கு நாட்கள்  தங்கி, சுற்றிப்பார்த்து விட்டு வந்தோம். எனது நீண்ட நாள் விருப்பம் தலைநகரை பார்க்கவேண்டும் என்பது . அப்போது பாராளுமன்றத்தை  பார்க்கும் போது நான் என் கணவரிடம் சொன்னேன்."ஒருதரமேனும் அங்கேலாவை பார்க்கவேணும் என்று"ஆனா இவ்வளவு  சீக்கிரம் அது நிறைவேறுமென கனவு கூட காணவில்லை. என்னைப் பொறுத்தவரை  "இது மறக்கமுடியாத,மகிழ்ச்சிக்குரிய விடயமாக கருதுகிறேன் .                                 
                           ஜேர்மனி பாராளுமன்றம்
******************************************************
வாக்களிக்க வாக்காளர் அட்டையும் வந்தாச்சு. 
இங்கு வாக்களிக்கும் இயந்திரம் இல்லை .வாக்குச்சீட்டில் புள்ளடி × தான்    இடவேண்டும். 
                                                             tks:google
அந்தந்த இடத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு உடனேயே கணனியூடாக அனுப்பிவைப்பார்கள். மாலை 6 மணிக்கு ஓரளவு யார் வெற்றி   பெறக்கூடும் என்பது தேர்தல் கணிப்பின் மூலம் (Wahl Prognose) தெரியவரும். தனித்து ஆட்சியா, கூட்டணியா, போன்ற எல்லா விபரங்களும் அன்றிரவே  அறிவித்து  விடுவார்கள்.  22 ந்திகதி வரை பொறுத்திருக்க வேண்டும்.

                    ***************************************

 

08/08/2013

மாற்றம் ஒன்றே மாறாதது.

மாற்றம், மாற்றம்
கொஞ்ச நாட்கள் பதிவு போடாமல் இருந்த நாட்களில் எங்களின்  வீட்டில் சில,பல மாற்றங்கள் செய்திருந்தோம்.( இன்னும்  சிலது முடியவில்லை.)
நாங்கள் வீடுகட்டி குடி வந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது.
வீட்டை அழகாகவும் , சுத்தமாகவும் பராமரிப்பது என்பது மிக  முக்கியம் . இங்கு அனேகமா(னோர்)க வீட்டிற்கு  குடிவந்து 5,6 வருடங்கள் சென்றுவிட்டால் திருத்தங்கள் செய்வார்கள்.
 (மீள் அழகாக்கல் ,redecorate மொழி பெயர்ப்பு  சரியா தெரியவில்லை. மன்னிக்க  ) 
அதாவது பெயிண்ட் அடிப்பது ,பேப்பர்(wallpaper) ஓட்டுவது,  தளபாடங்கள் மாற்றுவது, என ஏதாவது அப்போதைய ட்ரென்ட் க்கு ஏற்ப மாற்றங்கள் (செய்யவேண்டுமென்றால் ) கூடுதலானவர்கள் செய்வார்கள்.
நாங்கள் வீட்டின் வெளிச்சுவருக்கு பெயிண்ட் அடித்தோம் , வீட்டின் வரவேற்பறையில் Wallpaper ஒட்டி, furniture மாற்றினோம்.
                     வரவேற்பறை (LivingRoom) .அன்று       
                                      மாற்றங்கள்      
                 மேலே பலகை அடித்து ,லைட்ஸ்(கலர் லைட்ஸ் LED) போட்டிருக்கோம்
                1வது படத்தில் இருப்பது "குளிர்காலத்து நண்பன் ".அதாங்க chimney.
 வின்டரில் விறகு போட்டு எரிப்பது. வீடு நல்ல ஹீட்(heat)ஆக இருக்கும். எங்கள்
 வீட்டில் ஹீட்டர் , gas ல்தான்  இயங்குகிறது .இதனை பாவிப்பதின்மூலம் பணம் 
 மிச்சப்படுத்த முடிகிறது. காஸ் விலை அதிகம். கூடுதலாக அநேகர் இதனையே
 வீடுகட்டும்போது சேர்த்துக்கட்டுகிறார்கள்.எங்க வீட்டு ப்ளானில் இது இல்லை.
 கடைசி   நிமிடத்தில் இதனை சேர்த்தோம். முதலில் கணவர் வேண்டாம். 
 செலவு அதிகம் என்றார். இப்ப இதன் அருமை நன்றாகத் தெரிகிறது. கடைசி 
 நிமிடத்தில் இதனை சேர்க்கச்சொன்னது ஒரு Very Importent Person.
                                        ***********************
                           வெளிச்சுவருக்கு வெள்ளை அடித்தல்
                                        *************************
                           தற்போது எங்கள் வீட்டு வரவேற்பறை 

                                                     cappuccino colour.
 குறிப்பு: sofa மட்டும் மாற்றம்செய்யவில்லை. அவை கூடிய விலை கொடுத்து 
 வாங்கப்பட்டவை, அத்துடன் அவை genuine leather sofa. ஒரு பக்கம் திரைச்சீலை இன்னும்   மாற்றவில்லை.பொருத்தமானது தேடுகிறோம்.
 என் கணவரின் நண்பர் வீடு கட்டும் கம்பனியில் வேலை செய்வதால் உள்வீட்டு வேலைகளை என் கணவரும் ,அவரும் செய்து முடித்தார்கள். இங்கு அநேகமானோர் நண்பர்கள் ,உறவுகள் உதவியுடன் வீட்டின் உள்வேலைகள்(wallpaper ஓட்டுவது ,paintingஅடிப்பது furnitureமாற்றுவது ) செய்து முடிப்பார்கள். பெரிய வேலைகள் என்றால் மட்டுமே பணம் கொடுத்து செய்வார்கள். பணம் உள்ளவர்கள்,உதவி இல்லாதவர்கள் பணம் கொடுத்து செய்விப்பார்கள். 
                             ******************************
 வீட்டுத்தோட்டம்:_ 
                                           அறுவடைக்கு முன் புதினா    
                                                              பின் 


 
bouganvilla
Dahlia

 
 மிளகாய் 

           
அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை.நான்தாங்க. ஹி .ஹி
*****************************
அமரர் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளில் பிடித்தபாடலில் ஒன்று .:--
 
**********************************

 
Copyright பிரியசகி