RSS

04/06/2014

கீ...தம் சங்கீ..தம்

கூட்டிசைப்பாடல்  choral music
தோட்டபதிவு போட்டதும் அடுத்த பதிவை போட நினைத்திருந்தேன். 
ம்.ம் நினைப்பதெல்லாம் நடக்குதோ!!!! 
சின்ன வயதில் அம்மாவின் விருப்பத்திற்காக சங்கீதம் படித்தேன்.  தரம் 4 வரை படித்து பாஸாகியாச்சு. பின் பிரச்சனைகளால் அது இல்லாமல் போய்விட்டது.நீண்டகாலமா சும்மா படித்ததை முணுமுணுப்பது, சினிமா பாடல் பாடுவது எல்லாம் என் சமையலறையில் மட்டுமே. இப்படியே  நல்லாதான்  போய்கிட்டிருந்தது கடந்த வருடம் ஐப்பசி மாதம் வரை.
ஒருநாள் பக்கத்து வீட்டு டீச்சர் (இங்குள்ள)  "ஏன் நீ மியூசிக் க்ளாஸூக்கு வரக்கூடாது." என கேட்டா. ஆ..ஹா இது என்ன புதுசாஆ ஒரு ஆரம்பம் என நான் குழம்பித்தவித்தேன். தவிப்பெல்லாம் இந்த சங்கீதம் எப்படி இருக்கும், இனிமேல் படித்து டெஸ்ட் எல்லாம் எழுத முடியாது என்பதுதான். அத்துடன் இது எனக்கு புதிது. கேள்விப்படாதது.
என்னவாக இருக்கும் என்பதை பார்க்கவே, விருப்பமில்லாமல் சேர்ந்து கொண்டேன். கொஞ்சநாள் கஷ்டப்பட்டேன். பாடல்கள் பாட, பின் அதுவே விருப்பமாகிவிட்டது. லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜேர்மன் பாடல்கள் பயிற்சியளிக்கப்படுகிறது. பாட்டுப்பயில  வயதானவர்கள், பாடசாலை+பல்கலைகழக மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், குடும்பபெண்மணிகள்  வருகிறார்கள். ஒவ்வொரு இடங்களிலும் அடிக்கடி  CONCERT  நடைபெறும். 

இப்படி படிப்பதற்கு ஒரு அங்கீகாரம் தேவை என்பதாலும், திறமையான குழுக்களை தெரிவு செய்வதற்காகவும் 5 வருடத்திற்கு ஒரு முறை மாநில அளவில் போட்டிகள் நடைபெறும். அப்படியான போட்டி ஒன்று இந்த வருடம் வந்தது. எங்கள் குழுவும் கலந்துகொள்வற்காக தெரிவு செய்யப்பட்டு, அப்போட்டிக்காக பகல்,இரவு நேரங்களில் வகுப்பு நடாத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது.
இப்போட்டி கடந்த சனி, ஞாயிறு இருதினங்களாக  நடைபெற்றது. எங்கள் குழு சனியன்று 31.5.14 போட்டியிட தேர்வானது. மொத்தம் 20 குழுக்கள் போட்டியிட்டன.
                                 எங்கள் குழுவினர்
                                    ஒத்திகை பார்த்தல்
                 அரங்கத்தினுள் செல்லக்காத்திருக்கும் மக்கள்.
                                    அரங்கினுள் மக்கள்.
                                    பாடுகின்றோம்
வலமிருந்து 2வது நிற்பவர்தான் என்னை குழுவில் இணைத்த ஆசிரியை. இது எங்கள் குழுவின் சீருடை.(கருப்பு & ஊதாகலர்)
                 அனே(Anne) நன்றாக பாடும் திறமையுள்ளவர்
சான்றிதழுடன் Chairman & Music Director.வெற்றி பெற்ற மற்றைய குழுவினர்களும்.
போட்டியில் எங்கள் குழுவிற்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.  சான்றிதழ் வழங்கப்பட்டது. 20 குழுக்கள் பங்குபற்றின.
நாங்க இரவு 10 மணியளவில் எங்க இடத்திற்கு  வந்தபோது ஊர்மக்களால்   வரவேற்பு அளிக்கப்பட்டது.
                             *********************
இந்த பாராட்டுக்கள் எல்லாம் எங்கள் Music Director 
Michael Rinscheid  மிசைல் ரின்சைட் அவர்களுக்குதான் சேரும்.
                  _()_  _()_  _()_  _()_ _()_  _()_  _()_  _()_  _()_
இந்த பரபரப்பிலும் அனே கேட்டதற்காக செய்த கார்ட். அவரும் 
க்ராப்ட்நன்றாக செய்வார். க்விலிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார். 
                   இப்படியே கொடுத்தேன்.மிகுதி அவர் அழகு செய்திருந்தார்.
                            - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 


44 comments:

  1. வணக்கம் சகோதரி
    வாழ்த்துகள் வாழ்த்துகள்!! போட்டியில் வெற்றி பெற்றமைக்கு எனது அன்பான வாழ்த்துகள் சகோதரி. நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்ததும் தங்கள் குழுவினர் மூன்று பரிசு பெற்றதை அறிந்ததும் மட்டற்ற மகிழ்ச்சியாய் இருக்கிறது. ம்ம்ம் தலைப்பு அடுச்சுகவே முடியாது போங்க. தலைப்பு கூட சங்கீதம் பாடுகிறதே!! தோட்டப் பதிவிற்கு அப்புறம் நீண்ட இடைவெளி விட்டிருந்தாலும் மகிழ்ச்சியான தகவலைக் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் சகோ. இந்த வாரம் வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. தொடர்ந்து அசத்துங்கள். தம்பியின் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. உண்மையில் வித்தியாசமான அனுபவம் தான். பாடும்முன் எல்லாருக்கும் கொஞ்ச பயமிருந்திச்சி.
      பெரிய அனுபவமுள்ள குழுக்களோடு போட்டி.
      பிசிடைமிலும் வந்து கருத்திட்டமைக்கும், வாழ்த்துக்க ளுக்கும் ரெம்ப நன்றிகள்.

      Delete
  2. //போட்டியில் எங்கள் குழுவிற்கு 3ம் இடம் கிடைத்துள்ளது. சான்றிதழ் வழங்கப்பட்டது. //

    அன்புள்ள அம்முலு,

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    //இந்த பரபரப்பிலும் அனே கேட்டதற்காக செய்த கார்ட். //

    மிகவும் அழகாக உள்ளது.

    //இப்படியே கொடுத்தேன்.மிகுதி அவர் அழகு செய்திருந்தார்.//

    Superb ! Thanks for sharing !! All the Best !!!

    பிரியமுள்ள கோபு அண்ணன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு அண்ணா, இனிய வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் ரெம்ப நன்றிகள்.

      Delete
  3. அருமையான படங்கள்... பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்கும் ரெம்ப நன்றி அண்ணா.

      Delete
  4. பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள் அக்கா.

      Delete
  5. ஆஹா அருமை... அம்முலுவும் இப்போ பாடகியோ... சூப்பர்ர்.. அதனால்தான் நான் என் பெயரை மாற்றி விட்டேனாக்கும் :) அதாவது ஆஸா போஸ்லே அதிரா என்பதை:)..

    கார்ட் மிக சூப்பர் அம்முலு.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது திட்டமிட்ட சதீ :) பேரை மாற்றினதை சொல்றேன் .
      சரி உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாடல் போட்டி வைபோமா :))))
      .

      Delete
    2. நான் இந்த விளையாட்டுக்கு...சீ போட்டிக்கு வரல்ல.

      Delete
    3. வாங்க அதிரா. உங்க அளவுக்கெல்லாம் பாடகி இல்லை.
      எனக்கு டவுட்.
      //) அதாவது ஆஸா போஸ்லே அதிரா என்பதை:// ஆஷா போஸ்லே அதிரா என்றா. அல்லது அதிரா என்றா.
      உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் அதிரா.

      Delete
  6. ஆஹா ..கூட்டிசைப்பாடல் !!! அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் பாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு .
    .ஒரு பாட்டு சவுண்ட் க்ளவுட்ல ரெகார்ட் பண்ணி இங்கே போடுங்க ..உங்க வாய்ஸ் மட்டும் :)
    க்வில்லிங் கார்ட் சூப்பரோ சூப்பர் ..செம அழகு கலர் காம்பினேஷன் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஞ்சு. என் வாய்ஸ் தனிய வராது கோரஸ்ஸில் ஒரு குரல் தான். நானும் நினைத்தேன். பதிவிட லேட்டாகும் என்பதால் விட்டாச்சு. முயற்சிக்கிறேன்.
      உங்க கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றி அஞ்சு.

      Delete
  7. வாழ்த்துக்கள் அம்முலு! கீப் கோயிங்! விரைவில் தனியே பாடகி ஆக வாழ்த்துக்கள்.

    க்வில்லிங் கார்ட் சிம்பிள் அண்ட் க்ரேட் லுக்-ஆக இருக்கு. சூப்பர்ப்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி.நீங்க,குட்டிதேவதை நலம்தானே. ஆவ்வ்வ்வ்
      நீங்க என்ன ஒருபடி மேலே போய் தனியபாடகியாக வாழ்த்துறீங்க. விபரீத ஆசையெல்லாம் எனக்கு இல்லை.சும்மா எண்டர்டெயினிங். இதில் இருப்பதால் சின்ன சின்ன சமூகசேவையும் செய்யமுடிகிறது.ஒரு மகிழ்ச்சி. கார்ட் அவரசமா செய்தது. இன்னும் அழகாக்கி யிருக்கலாம்.
      வாழ்த்துக்களுக்கும்,கருத்துக்களுக்கும் ரெம்ப நன்றி மகி.

      Delete
  8. மூன்றாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி. கார்ட் அழகாக இருக்கிறது.தங்களின் அறிமுகம் கிடைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரி.வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வருகை தந்து, பாராட்டி கருத்திட்டமைக்கு ரெம்ப நன்றிகள்.

      Delete

  9. வணக்கம்!

    இசையென இன்பத்தை எய்துக! வாழ்வு
    விசையுடன் செல்க விரைந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!
      உங்கள் வரவு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. கவியுடன் கருத்திசைந்த தங்களுக்கு நன்றிகள் பல.

      Delete
  10. வணக்கம் சகோதரி.
    போட்டியில் வெற்றிப்பெற்றமைக்கு முதலில் பாராட்டுக்கள்.
    நான் திங்களை இப்பொழுது தான் தொடர ஆரம்பித்துள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. பாரட்டுக்களுக்கும், தொடர்வதற்கும் ரெம்ப நன்றிகள்.

      Delete
  11. இசைக்கு மொழி பேதமில்லை என்பது உண்மைதான் சகோதரி.... நேரமிருப்பின் எனது வலைப்பதிவுக்கு வந்து போகவும்.
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிகள்.

      Delete
  12. இப்டி எல்லா துறையிலும் கலக்கினால் எப்படி?!
    க்வேளிங் அட்டகாசம் தோழி!
    இந்த கைவேலையை பார்க்கும் போதெல்லாம் தோழி இளையநிலா அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்:))
    மூன்றாம் இடத்துக்கு வாழ்த்துகள் தோழி!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி.உங்களின் திறமையை விடவா.கைமண் அளவிலும் கற்றது மிகக்குறைவே. எனக்கும் அவரின் கைவேலையின் நேர்த்தி ரெம்ப பிடிக்கும்.
      உங்க வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றி தோழி.

      Delete
  13. வணக்கம் அம்மு!...

    இத்தனை திறமைகளையும் உங்களிடத்தில் கண்டு மிக்க மகிழ்வடைந்தேன். கோரஸ் பாடுவதற்கும் தகுந்த பயிற்சியும் ஊக்கமும் தேவை. அதைவிட குரல்வளம் மிக முக்கியமானது.
    அருமை. நல்ல முயற்சி! உங்கள் குழுவுக்கு 3ம் இடம் கிடைத்ததையிட்டும் வாழ்த்துக்கள் அம்மு!

    க்விலிங் கைவேலை அழகாக அருமையாக இருக்கிறது. அதற்கும் என் வாழ்த்துக்கள்!

    உங்கள் அன்பிற்கும் இதயங் கனிந்த நன்றி அம்மு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு உங்க வரவு.இப்படியே தொடர்ந்து இருங்க.
      நல்ல குரலோ இல்லையோ தெரியல்லை.ஆனா மனதுக்கு மகிழ்வைத்தருகிறது. உங்க வரவுக்கும் ,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் இளமதி.

      Delete
  14. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள் அக்கா.

      Delete

  15. சங்கீதத் தேரேறி சர்வமும் பெற்றேநீ
    மங்காப் புகழ்சேர வாழ் !

    இம்மா நிலத்தின் இசையருவி ஆகின்றாள்
    அம்முலு என்றோர் அணங்கு !

    முகிழுமிசை மூச்சாகி மூவுலகும் கேட்க
    நெகிழ்ந்துருகி வாழ்த்துமென் நெஞ்சு !

    முதலில் தங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
    எல்லோரும் அம்முலு என்று சொல்கிறார்கள் அதனால் நானும் சொன்னேன் ஹி ஹி ஹி தவறில்லை என்று நினைக்கிறேன் !

    தங்கள் பதிவைப் பார்த்ததும் நெஞ்சுக்குள் ஓர் ஓசை "" என்னது ப்ரியசகி பாடகியா என்று ''' ம்ம் பதிவோடு எல்லாமே அழகு !

    அப்படியே என் பாட்டையும் வந்து படித்து பாருங்களேன்

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளை,வாழ்த்துக்களையும் கவிதையால் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. அப்படியும் அழைக்கலாம்.வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றி சீராளன்

      Delete
    2. http://soumiyathesam.blogspot.com/2014/04/blog-post_19.html

      Delete
  16. இனிய வணக்கம் அம்மு!

    உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!
    வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இளமதி. முயற்சிக்கின்றேன்.

      Delete
  17. வணக்கம்
    தங்களை அழைத்துள்ளேன் வந்து பாருங்கள் என்னுடைய பக்கம் 10 கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான்.தங்களின் பதிலுக்காக காத்திருக்கேன்.
    http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/06/blog-post_21.html#comment-form

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ரூபன்,முயற்சிக்கின்றேன்.

      Delete
    2. முயற்சிக்கின்றேன் சகோ.ரூபன்.நன்றி.

      Delete
  18. வணக்கம்
    போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் இன்னும் தொடர் வெற்றிகள் குவியட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள்.

      Delete
  19. அடுத்த தடவ மூன்றாம் இடம் முதல் இடமாக வாழ்த்துக்கள் ! இரவு 10 மணி என்பது இவ்வளவு வெளிச்சமாகத்தான் இருக்குமா? இங்கும் கோடையில் இரவு 9:30 வரை வெளிச்சமாகவே இருக்கும். சாதாரண ஹார்ட் ஷேப் கார்டை இவ்வளவு வித்தியாசமாகக்கூட செய்ய முடியுமா என்ன என நினைக்கத் தோன்றுகிறது உங்க கைவண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப மகிழ்ச்சி சித்ரா. நீங்க அனேக பதிவுக்களுக்கு வந்து கருத்திட்டிருக்கிறீங்க. இங்கு நல்ல வெயில் எனில் 10 மணிக்கும் காலை 5மணிக்கும் நல்ல வெளிச்சம். ஜுலைக்கு பின் கொஞ்சம் குறைந்திடும்.
      உங்க வாழ்த்துக்கள்,கருத்துக்களுக்கு ரெம்ப நன்றிங்க.

      Delete
  20. Belated wishes priya,just now saw the post in fb & comment it here..

    ReplyDelete

 
Copyright பிரியசகி