RSS

31/08/2015

பார்த்ததும், ரசித்ததும்...

ஹாய் ப்ரெண்ட்ஸ் நலம்தானே.
நல்லபடியாக விடுமுறை கழித்து வந்து நாளாச்சு. கொஞ்சம் வேலைகள். பாடசாலை ஆரம்பம் மகனுக்கு. புதிய வகுப்பு. சுகயீனம் இப்படியாக நேரமின்மையால் ப்ளாக் பக்கம் வரமுடியவில்லை.

நாங்க தாய்லாந்தில் பட்டாயா Pattaya எனும் இடத்திற்கு போனபோது பார்த்தவை.

இது Thailand- Big Buddha Hill Pattaya .அண்ணாந்து பார்த்ததில் கழுத்து வலியே வந்துவிட்டது. அங்கு உள்ளவர்களுக்கு மிகுந்த பக்தியும்,நம்பிக்கையும் அதிகம்.



                        போன்சாய் கார்டன்...




                                 


                                            

இது நாங்க தங்கியிருந்த ஹோட்டலில் நடைபெற்ற அந்நாட்டு கலாசார நிகழ்வுகள்




பட்டர்பிளை ஹில்.
 இதற்கு நேரமில்லாததால் செல்லமுடியவில்லை..!!!!
                                      
                                              பீச்.....
காலை,மாலையில் அதிக கூட்டம் இருக்கும்.மதியவேளையில் இப்படித்தான் இருக்கும்..


தொடரும்............

19 comments:

  1. புகைப்படங்கள் எல்லாமே மிகவும் அழகு! நாங்கள் தாய்லாந்து சென்று வந்தது 20 வருடங்களுக்கு முன் 1994ல்! அதனால் உங்கள் புகைப்படங்கள் யாவுமே புதியதாய் இருக்கின்றன எனக்கு!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அழகான நாடு, அன்பாக பழகும் மனிதர்கள். பக்தியும் அதிகம். மீண்டும் போக சந்தர்ப்பம் கிடைத்தால் போய்ட்டு வாங்கோ மனோஅக்கா.
      வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள்.

      Delete
  2. நீங்கள் தாய்லாந்து சென்ற போது எடுத்த புகைப்படங்கள் அணைத்தும் அருமை. பிரியசகி இப்போது நலமா ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அக்கா. பெரிய டூர் போய்வந்தேன். பாடசாலை விடுமுறையில். அடுத்தடுத்த பதிவு சுற்றுலாவாக இருக்கும். இப்போ நலம் அக்கா. ரெம்ப நன்றி உங்க விசாரிப்புக்கும்,வருகை தந்து கருத்தளித்தமைக்கும்.

      Delete
  3. அழகான படங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றி சகோ.

      Delete
  4. வணக்கம் சகோ இவ்வகை பதிவொன்றை நான் எதிர் பார்த்திருந்தேன் ஆனால் தாய்லாந்து 80தை கணிக்கவில்லை புகைப்படங்கள் அருமை நான் வாழ்வில் ஒருநாளாவது போகவேண்டும் என்று நினைக்கும் நாடு தாய்லாந்து வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்க எதிர்பார்ப்பு புரிகிறது. காத்திருங்கள். வரும். கண்டிப்பா ஒருதரம் போய் வாருங்க அண்ணா ஜி!
      மிகவும் அழகான நாடு.
      வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்பநன்றி.

      Delete
  5. ஒரே கல்லில் ரெண்டு மாங்காயா !! சுற்றுலாவுடன் ஊரையும் போய் பார்த்தாச்சு :) அடுத்து சிங்கப்பூர் ? மலேஷியா ? அல்லது சீனா ?

    புத்தர் சிலைகளைப் பார்க்க‌ பிரமிப்பாய் இருக்கு. எங்கும் பசுமையாய் அழகாய் இருக்கு தாய்லாந்து. கடற்கரையும் சுத்தமா & அழகா இருக்கு. இங்கு ஒளிபரப்பாகும் ஷோக்களில் நிறைய தடவை 'தாய்லாந்து'தான் பார்த்திருக்கிறேன். அழகான படங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ப்ரியா.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சித்ரா இரண்டு மாங்காய் தான். சிங்கப்பூர்தான். ஆனால் நின்றது குறைவு. இங்கு செலவு அதிகம்.
      ம்..ம் மிக அழகு. இங்குள்ளவர்களுக்கு பிடித்தமான நாட்டில் இதுவும் ஒன்று. நல்ல காலநிலை, பீச், ஷொப்பிங் இதெல்லாம் நல்லாயிருக்கும். இன்னும் இருக்கு சுற்றுலா பற்றி
      வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சித்ரா.

      Delete
  6. பார்த்ததை எமக்கும் இங்கு பார்க்கப் பதிவிட்டதால்
    நாங்களும் மிகவே ரசித்தோம்!
    அத்தனை படங்களும் கொள்ளை அழகு! நேரில் போய்க்கான முடியாது விட்டாலும் இப்படி இங்கே பார்ப்பதனால் பல விடயங்களை அறிய முடிகிறது.

    பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் பிரியா!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ரசிக்க நிறைய இடங்கள் இருக்கு. ஆனா நாட்கள் இல்லை. புது புது இடங்கள் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் தானே.
      வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி.

      Delete
  7. ஆகா... தாய்லாந்தா ....அழகு ....அருமையான சுற்றுலா .................வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு. ஆமாம் இது அருமையான ,மறக்கமுடியாத சுற்றுலா. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி அனு.

      Delete
  8. படங்கள் கொள்ளை அழகு! நாங்கள் நலம் :) நீங்க நலம் தானே தோழி?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழி.நான் நலம். ரெம்ப நன்றி உங்க அன்பான விசாரிப்புக்கும்,வருகை தந்து கருத்தளித்தமைக்கும்.

      Delete
  9. படங்கள் சூப்பர் அக்கா

    ReplyDelete
  10. படங்கள் எல்லாம் அழகு. தாய்லாந்து பார்க்கவேண்டிய நாடுதான்.

    ReplyDelete

 
Copyright பிரியசகி